சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, தெலங்கானா மாநிலம் சார்லபல்லி – கோட்டயம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி, சார்லபல்லியில் இருந்து நவ.24-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு ரயில் (07115) புறப்பட்டு, மறுநாள் மாலை 5.30 மணிக்கு கோட்டயத்தை அடையும்.
மறுமார்க்கமாக, கோட்டயத்தில் இருந்து நவ.25-ம் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரயில் (07116) புறப்பட்டு, 27-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு சார்லபல்லியை சென்றடையும். இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக இயக்கப்படும். டிக்கெட்முன்பதிவு இன்று (14-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.