சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
இந்த சூழலில் “தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து எதுவும் அறிவிக்காமல் இருக்கிறார்.
இதனிடையே ஓபிஎஸ் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருவது, ஓ.பி.எஸ்ஸுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், மருது அழகுராஜ் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.