சப்தம் படத்தின் டிரைலர் வெளியானது!

Dinamani2f2025 02 192f04b10ktb2fgkjoyetbkaaijyf.jpeg
Spread the love

ஈரம் பட இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்துள்ள சப்தம் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் ‘சப்தம்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். தனது அறிமுக படத்தின் நாயகனான ஆதியுடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். நாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

ஆல்பா பிரேம்ஸ் சார்பில் 7ஜி பிலிம்ஸ் சிவா இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

இதையும் படிக்க | சுழல் – 2 டிரைலர்!

இப்படத்தில் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் பாடலான ‘மாயா மாயா’ கடந்த வாரம் வெளியானது.

ஈரம் படத்தைப் போன்று ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் பிப். 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *