சமையலர் பாப்பாள் மீதான வன்கொடுமை வழக்கு; 6 பேருக்கு தலா இரண்டு ஆண்டுகள் தண்டனை; விவரம் என்ன? | Case of assault on cook Pappal; 6 people sentenced to two years each; What are the details?

Spread the love

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பழனிசாமி, சக்திவேல், சண்முகம், துரைசாமி, சீதாலட்சுமி, வெள்ளியங்கிரி ஆகிய 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளித்த நீதிபதி சுரேஷ் மற்ற 26 பேரை விடுவித்து உத்தரவிட்டார்.

குற்றவாளிகளான பழனிசாமி, சக்திவேல், சண்முகம், துரைசாமி, சீதாலட்சுமி, வெள்ளியங்கிரி ஆகிய 6 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ் உத்தரவிட்டார்.

வழக்கறிஞர் ப.பா.மோகன்

வழக்கறிஞர் ப.பா.மோகன்

இந்த வழக்கு விசாரணை மிகவும் மந்தமாக நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2024-இல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது.

இருதரப்பு சாட்சியங்கள் விசாரணை, அரசுத் தரப்பிலான விசாரணை முடிவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதாக நீதிபதி சுரேஷ் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 4 பேர் உயிரிழிந்த நிலையில், 32 பேர் மற்றும் பாதிக்கப்பட்ட பாப்பாள் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பழனிசாமி, சக்திவேல், சண்முகம், துரைசாமி, சீதாலட்சுமி, வெள்ளியங்கிரி ஆகிய 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளித்த நீதிபதி சுரேஷ் மற்ற 26 பேரை விடுவித்து உத்தரவிட்டார்.

குற்றவாளிகளான பழனிசாமி, சக்திவேல், சண்முகம், துரைசாமி,சீதாலட்சுமி, வெள்ளியங்கிரி ஆகிய 6 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ் உத்தரவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *