சமையலறையில் அழுத வீட்டு வேலைக்காரப் பெண்: முதலாளி செய்த நெகிழ்ச்சியான காரியம்! | house-helper-birthday-celebration-viral-video-tamil

Spread the love

நவீன உலகில் இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு நடுவே, எளிமையான அன்பு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதைச் சில எளிய சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சமீபத்தில் வைரலான இந்தச் செய்தி, ஒரு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான உறவைத் தாண்டி, இரண்டு மனிதர்களுக்கு இடையிலான அன்பைப் பிரதிபலிக்கிறது.

தனது வீட்டு பணிப்பெண் பெண்மணி ஜோதி, சமையலறையில் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்தார். ஏதோ உடல்நலக்குறைவோ அல்லது குடும்பப் பிரச்னையோ என்று அவர், மெல்லச் சென்று அதற்கான காரணத்தைக் கேட்டார்.

அப்போது அந்தப் பெண்மணி சொன்ன பதில் ஆழமான வலி கொண்டது. “இன்று எனக்கு பிறந்தநாள், ஆனால் என் குடும்பத்தினர் கூட அதை மறந்துவிட்டார்கள். யாருமே எனக்கு வாழ்த்துச் சொல்லவில்லை” என்று அவர் அழுதுகொண்டே கூறினார்.

தன் வீட்டில் தங்களுக்காக உழைக்கும் ஒரு பெண்ணின் ஆசையை உணர்ந்த அந்த நபர், அடுத்த சில நிமிடங்களிலேயே சர்ப்ரைசாக பிறந்தநாள் கேக் வாங்கி வந்தார். மற்ற குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து, அந்தப் பெண்மணியை கேக் வெட்டச் செய்து உற்சாகமாகக் கொண்டாடினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *