“சமையல் எரிவாயு உருளைகளுக்கு தமிழக அரசு ரூ.100 மானியம் வழங்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ்| “The Tamil Nadu government should provide a ₹100 subsidy for cooking gas cylinders,” said Anbumani Ramadoss.

Spread the love

ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் வணிக சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

சிலிண்டர்

சிலிண்டர்

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “வளைகுடா போரால் ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் வினியோகம் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் முதல் தேநீர் கடைகள் முதல் நட்சத்திர விடுதிகளின் உணவகங்கள் வரை அனைத்து வகையான உணவகங்களும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்படுவதை நினைத்துப் பார்க்கவே கவலையாக உள்ளது.

தேநீர்கடைகள், சிற்றுண்டிகள், உணவகங்கள் போன்றவை தனித்த வணிகங்கள் அல்ல. உணவகங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் உள்ளிட்ட மூலப்பொருள்கள் கொள்முதல், உணவு வகைகள் தயாரிக்கப்பட்ட பிறகு அவற்றை பல்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்தல் என மிகப்பெரிய கொள்முதல் மற்றும் வினியோகச் சங்கிலியை உணவகங்கள் கொண்டுள்ளன. அவை மூடப்பட்டால் மூலப்பொருள்கள் கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் மட்டுமின்றி, உணவகப் பணியாளர்கள், உணவகங்களை சார்ந்துள்ள சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பணியாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *