சம்பல் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் தில்லியில் சந்தித்தனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமையன்று சம்பலில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை தனது இல்லத்தில் சந்தித்து, அவர்களின் நீதியை உறுதிசெய்ய அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், வயநாடு மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தியும் உடனிருந்தார்.
காதலிக்க நேரமில்லை: என்னை இழுக்குதடி பாடலின் மேக்கிங் விடியோ!
இதுகுறித்து காங்கிரஸ் சார்பில் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தப் பதிவில், “எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் எம்பியுமான பிரியங்கா காந்தி ஆகியோர் சம்பலில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தனர்.
சம்பலில் நடந்த சம்பவம் பாஜகவின் வெறுப்பு அரசியலின் தீய விளைவுகள். இது அமைதியான சமூகத்திற்கு ஆபத்தானது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, இந்த வன்முறை மற்றும் வெறுப்பு மனநிலையை அன்புடனும் சகோதரத்துவத்துடனும் தோற்கடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவாக நிற்கிறோம். அவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடுவோம்” எனக் பதிவிட்டுள்ளது.
ரஷிய அதிபரை சந்தித்த பாதுகாப்புத் துறை அமைச்சர்!
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி அன்று ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி இருவரும் சம்பலுக்குச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்திக்க சென்றபோது உத்தர பிரதேச அரசு அவர்களுக்கு அனுமதி மறுத்தது.
காஸிபூர் எல்லையில் உத்தர பிரதேச காவல்துறை ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி இருவரையும் தடுத்து நிறுத்திய நடவடிக்கை, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
காஸிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னர், காவல்துறையினருடன் தனியாக சம்பலுக்குச் செல்லத் தயார் என்று ராகுல் காந்தி கூறினார். ஆனால், அவருக்கு அனுமதியளிக்கப்படவில்லை.
முன்னதாக, நவம்பர் 24 அன்று சம்பலில் உள்ள ஒரு மசூதியில் நீதிமன்ற உத்தரவுப்படி, பாதுகாப்புப் பணியாளர்களுடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டதால் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் 4 பேர் பலியான நிலையில், பலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.