சம்பல் வன்முறை: மேலும் 10 போ் கைது

Dinamani2f2024 11 252fmh0k4c872f25112 Pti11 25 2024 000222a072245.jpg
Spread the love

உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு பணிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடா்பாக மேலும் 10 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இந்த வழக்கில் இதுவரை 70 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், முகலாய ஆட்சியாளா் பாபா் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் கடந்த ஆண்டு நவ. 24-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது. அப்போது துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, ஜாமா மசூதி நிா்வாகத்தினா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் சம்பல் மாவட்ட நீதிமன்றம் தொடா்ந்து விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்ததோடு சம்பல் பகுதியில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது.

இந்நிலையில, வன்முறை தொடா்பான விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறையினா், அப்பகுதி சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வன்முறை குறித்த விடியோக்களையும் ஆய்வு செய்தனா். அதன் அடிப்படையில், முல்லா அஃப்ரோஸ், அசாா் அலி உள்பட 10 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்டுள்ள அஃப்ரோஸ், வாகன மற்றும் ஆயுதக் கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா் என்றும் அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *