சம்பாதித்தும் சேமிப்பு இல்லையா? 35+ வயது பெண்கள் யாரிடமும் கையேந்தாமல் ₹1 கோடி சேர்க்கும் சீக்ரெட்!

Spread the love

காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை குடும்பம், அலுவலகம் என இரண்டு பக்கமும் ஓடி ஓடி உழைக்கும் தோழிகளுக்கு ஒரு சின்ன கேள்வி… “இத்தனை வருஷம் உழைக்கிறோமே, நமக்காக, நமது எதிர்காலத்துக்காக என்று தனியாக ஏதாவது சேமிப்பு இருக்கிறதா?”

“சேமிக்க ஆசைதான், ஆனா சம்பளம் குடும்பச் செலவுக்கே சரியா போகுது”, “எங்க போய் முதலீடு செய்யறதுனு எனக்குத் தெரியல”, “ஷேர் மார்க்கெட்னா பயமா இருக்கு” – இவைதான் 35 வயதைக் கடந்த பெரும்பாலான வேலைக்குச் செல்லும் பெண்களின் மனக்குரல்.

கல்வி, வேலை, சம்பாதிப்பது என அனைத்திலும் பெண்கள் முன்னேறிவிட்டாலும், “பணத்தை நிர்வகிப்பதில்’ (Financial Planning) இன்னமும் பல பெண்கள் தங்களின் கணவரையோ அல்லது தந்தையையோதான் சார்ந்திருக்கிறார்கள். தங்களுக்குத் தெரியாத ஒன்றில் பணத்தைப் போட்டு ஏமாந்துவிடக் கூடாதே என்கிற பயமும், “எப்படி ஆரம்பிப்பது?” என்ற தயக்கமும்தான் (Starting trouble) உங்களைச் செல்வச் செழிப்பிலிருந்து தடுத்து நிறுத்துகிறது. என்ன உண்மைதானே?

இந்தத் தயக்கத்தாலேயே முதலீட்டைத் தள்ளிப்போட்டால், வருங்காலம் எப்படி இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்:

தப்பிக்க முடியாத வேலை: ஆபீஸில் பாஸ் கொடுக்கும் டார்ச்சரைத் தாங்கிக்கொள்ள முடியாவிட்டாலும், “இந்த வேலையை விட்டா இஎம்ஐ யார் கட்டுவா?” என்ற பயத்தால் அந்த நரகத்திலேயே உழல வேண்டி வரும்.

குற்ற உணர்ச்சி: நாளை உங்கள் பிள்ளைகள் “எனக்கு இந்த விலையுயர்ந்த படிப்பு வேண்டும்” என்று கேட்கும்போது, அவர்களைப் படிக்க வைக்க முடியவில்லையே என்ற குற்றவுணர்ச்சி வாழ்நாள் முழுவதும் உங்களைக் கொல்லும்.

ஆரோக்கிய சீர்கேடு: வேலைப் பளுவும், எதிர்காலம் குறித்த பணக்கவலையும் சேர்ந்து உங்கள் மனதையும் உடலையும் சீக்கிரமே சோர்வடையச் செய்யும். 40 வயதிலேயே 50 வயதான தோற்றத்தையும் நோய்களையும் தந்துவிடும்.

காலம் மாறிவிட்டது… நீங்களும் கோடீஸ்வரி ஆகலாம்!

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், பணத்தை நிர்வகிப்பதில் ஆண்களை விடப் பெண்கள்தான் கெட்டிக்காரர்கள். அதை மியூச்சுவல் ஃபண்ட் துறையும் நிரூபித்துள்ளது. AMFI (Association of Mutual Funds in India) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் மொத்த முதலீட்டாளர்களில் 26% பெண்கள்! அவர்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு மட்டும் ₹11.25 லட்சம் கோடி.

ஆம், பல பெண்கள் தங்களுக்கான நிதிச் சுதந்திரத்தை சத்தமே இல்லாமல் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். “என்னிடம் பெரிய தொகை இல்லையே, மாதம் கொஞ்சம் பணம்தான் மிஞ்சும்” என்று கவலைப்பட வேண்டாம். மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தொடர்ந்து ‘SIP’ (Systematic Investment Plan) முறையில் முதலீடு செய்தால், நீங்களும் சுலபமாக 1 கோடி ரூபாய் சேர்க்க முடியும்.

SIP to achieve ₹ 1 Crore

SIP to achieve ₹ 1 Crore

இது வெறும் பேச்சல்ல… நிஜமான உதாரணம் இதோ!

“மாதம் கொஞ்சம் கொஞ்சமாப் போட்டா எப்படி 1 கோடி வரும்?” என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு நிஜமான மியூச்சுவல் ஃபண்டின் வரலாற்று லாபத்தை வைத்துப் பார்ப்போம்.

உதாரணமாக, Nippon India Growth Fund அல்லது SBI Magnum Midcap Fund போன்ற புகழ்பெற்ற ஃபண்டுகளை எடுத்துக்கொள்வோம். 15 வருடங்களுக்கு முன்பு, வேலைக்குச் செல்லும் ஒரு பெண், மாதம் ₹10,000-ஐ இந்த ஃபண்டுகளில் தொடர்ந்து SIP முறையில் முதலீடு செய்து வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா? 15 ஆண்டுகளில் அவர் செலுத்திய மொத்தப் பணம் ₹18 லட்சமாக இருக்கும். ஆனால், கூட்டுவட்டி மற்றும் சந்தை வளர்ச்சியின் மூலம் அந்தப் பணம் இன்று ₹1 கோடிக்கும் மேல் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கும்! (இந்த ஃபண்டுகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து சராசரியாக 16% முதல் 22% வரை வருமானம் கொடுத்துள்ளன. இதுவே வங்கி FD வெறும் 6-7% மட்டுமே வட்டி கொடுத்திருக்கும்!)

இந்த 1 கோடி உங்களுக்குக் கொடுக்கும் சுதந்திரம் என்ன?

கற்பனை செய்து பாருங்கள்… உங்கள் பேங்க் அக்கவுண்டில் 1 கோடி ரூபாய் இருந்தால், உங்களுக்கு எப்படிப்பட்ட மன நிம்மதி கிடைக்கும்?

பயமற்ற வாழ்க்கை: “வேலையில டென்ஷனா? நாளைக்கே வேலையை விட்டுட்டு எனக்குப் பிடிச்ச பிசினஸைச் செய்வேன்” என்ற தைரியமும், ‘யாரையும் சார்ந்து வாழத் தேவையில்லை’ என்ற கர்வமும் வரும்.

குடும்பத்தின் ஹீரோ: பிள்ளைகளின் உயர்கல்விக்கோ, திருமணத்துக்கோ வங்கியில் போய் லோன் கேட்க வேண்டியதில்லை. நீங்களே உங்கள் குடும்பத்தின் பணத்தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்யலாம்.

என்றும் இளமை: பணக்கவலை இல்லாததால், ஸ்ட்ரெஸ் (Stress) குறைந்து உங்கள் முகம் எப்போதுமே புன்னகையுடனும், இளமையாகவும் இருக்கும்!

பெண்களே, உங்களின் நிதிச் சுதந்திரமே உங்கள் குடும்பத்தின் மிகப்பெரிய பலம். “மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன? அதை எப்படிப் பாதுகாப்பாகத் தொடங்குவது? எனக்கான 1 கோடி ஃபார்முலாவை எப்படி உருவாக்குவது?” என்கிற உங்களுக்கான அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்க வருகிறது ஒரு சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி.

Labham Women Investor Awareness Meet - March 08, 2026

Labham Women Investor Awareness Meet – March 08, 2026

நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரி – பெண்களுக்கான சிறப்பு முதலீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச மகளிர் தின சிறப்பு வழிகாட்டல்

நாள்: மார்ச் 08, 2026, ஞாயிறு
நேரம்: காலை 11 மணி – இந்திய நேரம்
பேச்சாளர்: வசந்தா ஸ்ரீ, மேனேஜர் – ஹீலியோஸ் மியூச்சுவல் ஃபண்ட்ஸ், சென்னை

மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான ‘லாபம்‘ வழங்கும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. அனுமதி முற்றிலும் இலவசம். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் 50 பேருக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம்.

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்: https://labham.money/events/webinar-mar08-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_mar08_2026

முக்கிய குறிப்பு: கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள ஃபண்டுகள் கணக்குக்காக மட்டுமே, அவை பரிந்துரைக்கல்ல. மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் ஆவணங்களை சரியாக படிக்கவும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *