இது குறித்து அவர் இன்று(செப். 2) தெரிவித்திருப்பதாவது: “ஜம்மு – காஷ்மீரில் நெடுஞ்சாலைகளில் ஏராளமான பழங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதாலும், பழ மண்டிகளிலும் பதப்படுத்துமிடங்களிலும் இடப்பற்றாக்குறை காரணமாகவும் பழங்கள் விளைவிக்கும் விவசாயிகள் பெரும் பிரச்சைனையை எதிர்கொள்கிறார்கள்.
இத்தகைய சூழலில், ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு சரக்கு ரயில் சேவை தேவைப்படுகிறது. இதனால், ஜம்முவிலிருந்து தில்லிக்கு பழங்கள் எடுத்துச் செல்வது பாதிக்கப்படாது. இது காலத்தின் கட்டாயமாகும். பழ விவசாயிகளுக்கு ரயில் சேவை மிகுந்த பயனளிக்கும்.
ஆகவே, ரயில்வே அமைச்சர் சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை வைக்கிறேன். இதன்மூலம், நாடெங்கிலும் உள்ள மண்டிகளுக்கு இங்கு விளைவிக்கப்படும் பழங்கள் விரைந்து எடுத்துச் செல்லப்படும்” என்றார்.