இந்த வருடம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம் எதுவென்று தெரிந்துகொள்ளலாம்.
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும்.
உடல் வலிமையின் சக்தியாக துர்க்கா தேவியையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தைத் தரவல்ல சக்தியாக மஹாலட்சுமியையும், அறிவையும் ஆற்றலையும் தரவல்ல கல்வியின் தேவதையாக சரஸ்வதி தேவியையும் நாம் வழிபட்டு அந்த தேவியரின் அருள் பெற்று வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றினையும் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே நவராத்திரி.