சரும பொலிவுடன் இளமையாக ஜொலிக்க வேண்டுமா… அப்போ இளநீரை இப்படி பயன்படுத்துங்க…

Hyp 4522001 Cropped 01072024 221729 White And Yellow India Tra 5 3x2.jpg
Spread the love

தோல் வறட்சி, சுருக்கம் ஏற்படாமல் இளமையாகத் தோற்றமளிக்க இளநீரில் உள்ள சத்துக்கள் உதவுகின்றன.

வெயிலின் தாக்கத்தால் உடலில் ஏற்படும் அயற்சியைப் போக்கு புத்துணர்வு அளிக்கும் இளநீரானது உடலுக்குத் தேவையான பல தாது உப்புக்களையும் மருத்துவப் பண்புகளையும் கொண்டது.

காலையில் இளநீர் குடிப்பதன் மூலம் உடலைச் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடியும். இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்கள் சிறுநீரகச் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

காலை எழுந்தவுடன் இளநீர் குடிப்பது அனைத்து வகையான வயிற்றுப் பிரச்சனைகளையும் சரி செய்கின்றது. பெண்கள் இளநீர் குடிப்பதன் மூலம் மாதவிடாயால் ஏற்படும் பிரச்சனைகள் தவிர்க்கப்படுகின்றன.

இளநீர் குடித்தால் பிறக்கும் குழந்தைக்குத் தலை முடி வளராது என்ற கருத்தால் கர்ப்பிணிப் பெண்கள் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பார்கள். ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் இளநீர் குடிப்பது அவர்களுடன் நலத்திற்கு மிக நன்மை பயக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகாலத்தில் வாந்தி எடுப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையும். அதுவே இளநீர் அருந்துவதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும் என கூறப்படுகிறது.இளநீரில் பல முக்கிய வைட்டமின்ஸ், மினரல்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் உள்ளது. மேலும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, இதய ஆரோக்கியம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ரத்த சர்க்கரை அளவு போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை இளநீர் வழங்குகிறது.

இளநீர் உடலுக்கு மட்டுமின்றி கூந்தலுக்கும் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடியது. இளநீர் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் சமபங்கு கலந்து எடுத்துக் கொள்ளவும். ஷாம்பு மற்றும் கண்டிஷனரைக் கொண்டு கூந்தலை வாஷ் செய்த பிறகு இந்த கலவையை உச்சந்தலை மற்றும் முடி முழுவதும் ஊற்றி சுமார் 1 நிமிடம் ஊறவைத்த பின் பச்சை தண்ணீரில் கூந்தலை அலசவும். இது முடி சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்.

இளநீரில் உள்ள வைட்டமின் சி, அமினோ ஆசிட்ஸ் சருமப் பிரச்சனைகளைக் குணப்படுத்தி முகத்தைப் பளபளப்பாக்க உதவியாக உள்ளது. மேலும் இளநீருடன் மஞ்சள், சந்தனம் கலந்து பேஸ்பேக் போடுவதன் மூலம் முகம் பொலிவாக தோற்றமளிக்கும்.

இளநீரில் இருக்கும் இயற்கை வைட்டமின்ஸ், மினரல்ஸ் சருமத்தின் பிரச்சினைகளை நீக்கி அதை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுகின்றன. இதில் உள்ள சைட்டோகின்ஸ் என்ற புரோட்டின் செல் பெருக்கத்திற்கு உதவி உங்கள் சருமத்தின் டோனை சமன் செய்கிறது. இதனால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது தாமதமாகி இளமையான தோற்றத்துடன் காட்சியளிக்கலாம்.

நன்றி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *