நீரிழிவு நோய் என்பது உலகம் முழுவதும் காணப்படும் கடுமையான நோயாகும். உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின்படி, உலகில் 422 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 சதவீத சர்க்கரை நோயாளிகள் இந்தியாவை சேர்ந்தவர்கள். அதாவது இந்தியாவில் 8 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புள்ளிவிவரங்களின்படி, 2045-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 13.5 கோடி பேர் சர்க்கரை நோயாளிகளாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்தியா உலகின் நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. டைப்-2 நீரிழிவு நோய்க்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கம்தான் முக்கிய காரணம். அத்தகைய சூழ்நிலையில், சிறிய அறிகுறி இருந்தால், நீரிழிவு பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
வெறும் வயிற்றில் சர்க்கரையின் அளவு 125க்கும் அதிகமாக இருக்கும். அதேசமயம் Hb1ac இயல்பான அளவில் இருக்கும். இது மூன்று மாதங்கள் வரை நீடிக்கலாம். இப்படி மாறி மாறி காட்டுவது நீரிழிவு நோயின் அறிகுறியா அல்லது நீரிழிவு நோய் வருவதற்கான எச்சரிக்கையா என பலருக்கும் கேள்வி எழலாம். இதைத் தீர்க்க நியூஸ் 18 பிரபல நாளமில்லாச் சுரப்பி நிபுணர் டாக்டர். பராஸ் அகர்வாலிடம் பேசியது.
முதலில் வெறும் வயிற்றில் உள்ள சர்க்கரையை சரி பார்க்கவும்
மேக்ஸ் ஹெல்த்கேர் குர்கானின் ஆலோசகர் உட்சுரப்பியல் நிபுணரும் நீரிழிவு நிபுணருமான டாக்டர். பராஸ் அகர்வால் கூறுகையில், இதுபோன்ற சந்தர்ப்பங்களில், முதலில் வெறும் வயிற்றில் எடுக்கப்பட்ட சோதனை சரியானதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். சில நேரங்களில் சோதனை சரியாக இருக்காது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
உதாரணமாக, குறைவான தூக்கம், சோதனைகளுக்காக காலையில் தாமதமாகச் செல்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவை காரணங்களாக இருக்கலாம். எனவேதான் நோயாளியிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும். ஒன்று அல்லது இரண்டு பரிசோதனைகள் சரியாகச் செய்து, அதிலும் சாப்பிடாமல் இருக்கும்போது எடுக்கப்பட்ட இரத்த சர்க்கரையின் அளவு 125 ஐத் தாண்டினால், அது நீரிழிவு நோய்க்கு முந்தைய அறிகுறிகளாக இருக்கலாம் அல்லது நீரிழிவு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
சாப்பிடாமல் எடுக்கப்பட்ட டெஸ்டில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால்..
டாக்டர். பராஸ் அகர்வால் கூறுகையில், முன்னெச்சரிக்கையுடன் நீங்கள் ஃபாஸ்டிங் இருக்கும்போது இரத்த சர்க்கரை பரிசோதனையை காலையில் செய்திருந்தால், அது 125 க்கு மேல் இருந்து Hb1Ac சாதாரணமாக இருந்தால், அது சரியான பரிசோதனையாகும். அதாவது மருத்துவர் உங்களுக்கு நீரிழிவு நோய் வரலாம் என்பதை ஓரளவுக்கு உறுதி செய்வார்கள். சில நேரங்களில் சிறுநீரக பாதிப்பு ஏதேனும் இருந்தாலும் இந்த Hb1Ac அளவில் மாற்றம் இருக்கும்.
மேலும் உறுதி செய்ய உணவு உண்ட பிறகும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதிக்க வேண்டும். சாப்பாட்டுக்குப் பிந்தைய சுகர் சோதனையும் அதிகரித்தால், அதாவது 160க்கு மேல் இருந்தால், அது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை. இந்நிலையில் மெட்டபாலிக் மெமரி டெஸ்ட் அதாவது Hb1ac ரிப்போர்ட் இயல்பானது என்றாலும், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் குடும்பத்தில் சர்க்கரை நோய் வரலாறு இருந்தால், எதிர்காலத்தில் உங்களுக்கு சர்க்கரை நோய் வரலாம். எனவே இப்போதிருந்தே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Also Read :
உங்க சிறுநீரகங்கள் நன்றாக வேலை செய்கிறதா என தெரிஞ்சுக்கனுமா..? இந்த 2 சிம்பிள் டெஸ்ட் போதும்..
எல்லைக்கோட்டில் இருக்கும் நீரிழிவு நோயை எவ்வாறு தடுப்பது..?
உங்களுக்கு நீரிழிவு நோய் வருவதுபோல் அறிகுறிகள் இருந்தால், உங்கள் அன்றாட வழக்கத்தில் பல விஷயங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் பராஸ் அகர்வால் கூறுகிறார். நீரிழிவு நோய் மோசமான வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது என்பதால், உங்கள் வாழ்க்கை முறையை சரிசெய்யவும். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள், நடைபயிற்சி செய்யுங்கள். டென்ஷன் ஆகாதீர்கள். உங்களை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள், முக்கியமாக உங்கள் உணவு முறையை ஆரோக்கியமாக மேம்படுத்துவதே மிகப்பெரிய விஷயம்.
.