நடிகர் கார்த்தியின் சர்தார் – 2 வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.
இதிலும் நடிகர் கார்த்தியே நாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: பிளாக்பஸ்டரான சாவா!
படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் எடிட்டிங் பணிகளுடன் மற்ற பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருவதாகவும் படத்தை ஜூன் மாதம் திரைக்குக் கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.