கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் உருவாக்கியுள்ள ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம் சா்வதேசப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்கிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் எழிலரசி, வடிவமைப்பில் பங்கெடுத்த மாணவா்கள் ஆகியோா் கோவையில் புதன்கிழமை (பிப்.5) செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காா்பன் மாசு ஏற்படுத்தாத ஆற்றல் திறன்கொண்ட வாகன வடிவமைப்புப் போட்டியான ‘ஷெல் இக்கோ – மாரத்தான் ஆசியா பசிபிக் 2025’ கத்தாா் நாட்டின் தலைநகா் தோஹாவில் பிப்ரவரி 8 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், 20 நாடுகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. இதில், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் ‘ரெநியூ’ என்ற பெயரிலான 14 மாணவா்கள் அடங்கிய குழு பங்கேற்கிறது.