சர்வதேச மகளிர் தினத்தின் ஆணிவேர்: கிளாரா ஜெட்கின் என்றொரு நெருப்புப் பெண்! The Root of International Women’s Day: Clara Zetkin, a fiery woman

Spread the love

அப்போது, அரங்கத்தில் ஒரு பெண் கம்பீரமாக எழுந்து நின்றார். அவர்தான் ஜெர்மனியைச் சேர்ந்த சோசலிசப் போராளியான கிளாரா ஜெட்கின். மேடையேறிய அவர், அரங்கமே அதிரும்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை முன்மொழிந்தார்:

“உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், குறிப்பாக பெண்களின் வாக்குரிமையை வலியுறுத்தியும், ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நாளை `சர்வதேச மகளிர் தினமாக” (International Women’s Day) நாம் அனைவரும் ஒருங்கிணைந்து கடைப்பிடிக்க வேண்டும்!”

கிளாரா ஜெட்கின்

கிளாரா ஜெட்கின்

அவரது குரலில் இருந்த தீர்க்கமும், நியாயமும் அங்கிருந்த அனைவரையும் ஈர்த்தது. 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்களும் கைதட்டி அந்தத் தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். அப்படி ஒரு பெண்ணின் சிந்தனையில் உதித்த அந்தத் தீப்பொறிதான், இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் `சர்வதேச மகளிர் தினம்’.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *