சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக அரசு திட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் குற்றச்சாட்டு | Indian Union Muslim League leader alleges BJP govt plans to run dictatorial regime

1372638
Spread the love

நாகப்பட்டினம்: சர்​வா​தி​கார ஆட்சி நடத்த பாஜக திட்​ட​மிட்​டுள்​ள​தாக இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தேசி​யத் தலை​வர் கே.எம்​.​காதர் மொகிதீன் கூறி​னார். நாகூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: மத்​தி​யில் ஆளும் பாஜக அரசு அரசி​யல் சாசனத்​துக்கு அப்​பாற்​பட்டு ஆட்சி செய்து வரு​கிறது.

வாக்​காளர் பட்​டியலை ஆண்​டுக்கு 3 அல்​லது 4 முறை மட்​டுமே திருத்​து​வதற்கு தேர்​தல் ஆணை​யத்​துக்கு உரிமை உள்​ளது. ஆனால், சட்​டத்​தில் இல்​லாத சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை தேர்​தல் ஆணை​யம் பிஹாரில் மேற்​கொண்​டுள்​ளது.

அந்த மாநிலத்​தில் ஒரு குறிப்​பிட்ட தொகு​தி​யில் ஒரே இடத்​தில் 4,000 ஓட்​டு​கள் எப்​படி வந்தன என்று எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல்​காந்தி கேள்வி எழுப்​பி​யுள்​ளார். ஆனால், அதுகுறித்த விவரங்​களை தர முடி​யாது என இந்​திய தேர்​தல் ஆணை​யம் கூறி​யுள்​ளது முட்டாள்​தன​மாக உள்​ளது. இது சாதாரண விஷ​யம் அல்ல. நமது நாடு இந்​திய அரசி​யலமைப்பு சட்​டப்​படி நடக்​கிறதா என்று கேள்வி எழுந்​துள்​ளது.

இந்த விவ​காரம் தொடர்​பாக ராகுல் காந்தி மற்​றும் எதிர்க்​கட்​சி​யினர் எழுப்​பிய கேள்வி​களுக்கு இது​வரை பிரதமர் மோடி மற்​றும் இந்​திய தேர்​தல் ஆணை​யம் பதில் கூற​வில்​லை.

தற்​போது பிஹாரில் நடக்​கும் செயல், நாளை தமிழகத்​தி​லும் நடக்​கலாம்? மத்​தி​யில் ஆளும் ஆட்​சி​யாளர்​கள் விரும்​பியதை சட்​ட​மாக நிறைவேற்றி வரு​கிறார்​கள். இந்​தி​யா​வில் சர்​வா​தி​கார ஆட்​சியை நடத்த பாஜக அரசு திட்​ட​மிட்​டு, இது​போன்ற செயல்​களை அரங்​கேற்றி வரு​கிறது. தமிழகத்​தில் ஆட்சி அமைப்​போம் என்று சொல்ல அனைத்​துக் கட்​சிக்​கும் உரிமை உள்​ளது. ஆனால், திமுக கூட்​ட​ணி​தான் பலமாக உள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *