சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

Dinamani2f2025 04 142fro4wbez32f20240706122l.jpg
Spread the love

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசின் வோர்லி போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த மிரட்டல் செய்தி வந்துள்ளது.

சல்மான் கானை அவரது இல்லத்திலேயே வைத்துக் கொன்றுவிட்டு, அவரின் வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வோர்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர் கொலை முயற்சி, மிரட்டல் ஏன்?

பிஷ்னோய் மக்களின் குருவான 16 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறுவடிவமாக பிளாக்பக் மான்கள் கருதப்பட்டு வருகிறது.

1998 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் படப்பிடிப்புக்கு சென்றிருந்த சல்மான் கான், பிளாக்பக் மான்களை வேட்டையாடியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றத்தை நாடி ஜாமீன் பெற்றிருந்தார் சல்மான் கான்.

இந்த நிலையில், பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சல்மான் கானை கொலை செய்வதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. பலமுறை வெளிப்படையாக கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனிடையே, மத்திய அரசு தரப்பில் சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : சல்மான் கான் என்ன செய்தார்? கொலை மிரட்டல் ஏன்? விரிவாக!!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *