இவர் சித்திக்கின் தொலைப்பேசிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (அக். 25) மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அலுவலகத்திலிருந்து புகார் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து மிகக் குறுகிய காலத்தில் விசாரணை மேற்கொண்டு காவல் துறையினர் குற்றவாளியைக் கண்டறிந்துள்ளனர். இவரை நொய்டா நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். இவரை 4 நாள்களுக்கு விசாரணைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பாந்த்ரா கிழக்கு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர் ஜீஷான் சித்திக். இவரின் தந்தையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார்.
லாரன்ஸ் பிஷ்னோய் குழுவினர் இக்கொலையைச் செய்ததாக பொறுப்பேற்றனர். மேலும், பாபா சித்திக்கின் மகன் மற்றும் சல்மான் கானையும் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.