சளி, வைட்டமின் குறைபாட்டுக்கான 90 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை | Central Drug Regulatory Board warns 90 medicines

1344094.jpg
Spread the love

சென்னை: சளி, வைட்டமின் குறைபாடு, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஆய்வின்போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, சளித் தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அந்த மருந்துகளில் பெரும்பாலானவை இமாசலப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தன.

அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த விவரங்களை, அந்த இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொண்டு, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதேநேரம் சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *