சவூதி அரேபிய அமைச்சகத்தில் பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சவூதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் மூன்றாண்டு பணி அனுபவத்துடன் முதுகலை மருத்துவப் படிப்பு தேர்ச்சி பெற்ற 55 வயதிற்குட்ட மருத்துவர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.