‘சாட்டை துரைமுருகனுக்கு 2026 தேர்தலில் சீட் இல்லை!’ – சீமான் முடிவின் பின்னணி என்ன? |Why NTK’s Star Face Saattai Durai Murugan Didn’t Get a Ticket in 2026 Elections”

Spread the love

நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பிரமுகரும் கொள்கைப் பரப்புச் செயலாளருமான சாட்டை துரைமுருகனின் பெயர் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்கிறார்கள் உட்கட்சி விவரமறிந்த சிலர்.

நாம் தமிழர் கட்சிக்குள் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் 8.2% வாக்குகள் பெற்று மாநில அந்தஸ்த்தை எட்டிய நிலையில், சட்டமன்றத் தேர்தலில் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பிலிருந்து வேட்பாளர்களை அறிவித்துவருகிறார் சீமான்.

அதன்படி நா.த.க-வின் அறிந்த முகங்களான இடும்பாவனம் கார்த்திக், பாத்திமா பர்கானா, வெண்ணிலா தாயுமானவன், இயக்குநர் களஞ்சியம், ஹூமாயூன், மரியா ஜெனிபர், ஹிம்லர், கோவை கார்த்திகா, அனிஷ் பாத்திமா, அபு பக்கர், சீதா லட்சுமி, மருத்துவர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்களை வேட்பாளராக களமிறக்கியிருக்கிறார் சீமான். மேலும் பிரபலத்தன்மைக்காக கட்சிக்கு வெளியிலிருந்து வேட்பாளரை கொண்டுவரவும் தயாராக இருக்கிறதாம் நா.த.க.

சாட்டை துரைமுருகன்

சாட்டை துரைமுருகன்

எனினும் கட்சியில் நட்சத்திர தன்மைகொண்ட சாட்டை துரைமுருகனின் பெயர் பட்டியலில் விடுபட்டிருப்பதாக வெளியாகும் தகவல் பேசுபொருளாகியிருக்கிறது. ஏற்கனவே “சாட்டை வலையொளிக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை’ என சீமான் அறிவித்திருந்த நிலையில், வேட்பாளர் பட்டியலிலும் அவரது பெயர் விடுபட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள் கட்சிக்குள் முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *