சாதிக்கும் தமிழ்நாடு: புகழும் மத்திய அரசு!

Dinamani2f2025 01 312fjg1nugrd2fgfqp1s Asaas2yv.jpg
Spread the love

இந்தியாவில் தோல் பொருள்கள் தயாரிப்புத் துறையில் தமிழ்நாடு சாதனை புரிந்து வருவதாக தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.

இந்தியாவில் தோல் பொருள்கள் தயாரிப்புத் துறையில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்து வருவதாக மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் கூறியுள்ளது. தொடர்ந்து, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் தமிழ்நாடு இருப்பதாகவும் கூறியது.

நாட்டின் காலணிகள் மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் 38 சதவிகிதத்தையும், தோல் பொருள்கள் ஏற்றுமதியில் சுமார் 47 சதவிகிதத்தையும் தமிழ்நாடு வழங்குவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், காலணி தொழிற்சாலைகள் மூலம் தமிழ்நாட்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதாகவும் கூறுகிறது. இந்த ஆய்வறிக்கை குறித்து தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *