ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.
நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், “சமூக நடைமுறையில் இருந்து சாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டுமானால், முதலில் மனதிலிருந்து சாதியை அகற்ற வேண்டும்.

கடந்த காலங்களில் சாதி என்பது தொழில் மற்றும் வேலையுடன் தொடர்புடையதாக இருந்தது. பின்னர் அது சமூகத்தில் ஆழமாக வேரூன்றி, பாகுபாட்டிற்கு வழிவகுத்தது.
இதற்கு முடிவுகட்ட, ஒவ்வொரு மனதிலிருந்தும் சாதியை அகற்ற வேண்டும். இதை நேர்மையாகச் செய்தால், 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் சாதிப் பாகுபாடு ஒழிக்கப்படும்.
பொதுமக்களின் தனிப்பட்ட குணநலன்களை வளர்ப்பதன் மூலம் சமூகத்திற்கு வலிமையூட்டி, தேசத்தின் பெருமையை நிலைநாட்டுவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம்.
ஆர்எஸ்எஸ் பெரிய சங்கமாக மாற எப்போதும் விரும்பியதில்லை. சமூகத்தை மேம்படுத்தவே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கமாகும்.

எதிர்ப்புகளுக்கு எதிர்வினையாற்றுவதோ, போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவதோ ஆர்எஸ்எஸ் வேலை இல்லை. முற்றிலும் தேசத்தை மையமாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ் செயல்படும்” என்று பேசியிருக்கிறார்.