சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சட்டம்: பிருந்தா காரத் வேண்டுகோள் | Brinda Karat request for law against caste based atrocities and murders

1376191
Spread the love

தூத்துக்குடி / திருநெல்வேலி: ​சா​திய வன்​கொடுமை கொலைகளுக்கு எதி​ராக சட்​டம் இயற்ற வேண்​டும் என்று மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் பிருந்தா காரத் கூறி​னார். தூத்​துக்​குடி மாவட்​டம் ஏரல் அரு​கே​யுள்ள ஆறு​முகமங்​கலத்தை சேர்ந்த மென்​பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ் (27), கடந்த ஜூலை 27-ம் தேதி நெல்​லை​யில் கொலை செய்​யப்​பட்​டார். சாதி மாறி காதலித்​த​தால் நடந்த இந்த கொலை அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இந்​நிலை​யில், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் பிருந்தா காரத், மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் ஆகியோர் நேற்று ஆறு​முகமங்​கலத்​தில் உள்ள கவின் செல்​வகணேஷ் வீட்​டுக்​குச் சென்​று, அவரது குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் கூறினர்.

பின்​னர், பிருந்தா காரத் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கவின் செல்​வகணேஷ் சாதி ரீதி​யாக படு​கொலை செய்​யப்​பட்​டது நாட்​டுக்கே அவமானம். அவரது குடும்​பத்​துக்கு தேவை​யான உதவி​களை தமிழக அரசு செய்​துதர வேண்​டும். கவின் செல்​வகணேஷ் கொலை வழக்கை விரை​வாக நடத்​தி, குற்​ற​வாளி​களுக்கு தண்​டனை பெற்று தர வேண்​டும். இந்த வழக்​கில் சாதி ரீதி​யான கும்​பலுக்கு தொடர்​புள்​ளது. அவர்​களை​யும் கைது செய்ய வேண்​டும்.

சாதிய ரீதியி​லான படு​கொலைகளை தடுப்​ப​தற்கு சிறப்பு சட்​டம் தேவை. சாதிய படு​கொலைகள் வட மாநிலங்​களில் அதிக அளவில் நடை​பெற்று வரு​கின்​றன. எனவே, சாதிய வன்​கொடுமை கொலைகளை தடுக்க தேசிய அளவி​லான சட்​டம் கொண்டு வர வேண்​டும் என 2014-ல் இருந்து தேசிய மகளிர் ஆணை​யம், ஜனநாயக அமைப்​பு​கள், உச்ச நீதி​மன்​றம் ஆகியவை வலி​யுறுத்தி வரு​கின்​றன.

ஆனால், மத்​திய பாஜக அரசு சாதிய வன்​கொடுமை கொலைகளுக்கு எதி​ராக சட்​டம் இயற்ற மறுத்து வரு​கிறது. எனவே, நாட்டுக்கே முன்​னு​தா​ரண​மாக தமிழக அரசு இந்த சட்​டத்தை உடனடி​யாக கொண்டு வரவேண்​டும். இவ்​வாறு பிருந்தா காரத் கூறினார்.

தேர்​தல் ஆணை​யம்​… நெல்​லை​யில் பிருந்தா காரத் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யாவை ஆளும் சக்​தி​கள் பன்​முகத்​தன்​மைக்​கும், ஒற்​றுமைக்​கும் எதி​ராக செயல்​படு​கின்​றன. தமிழகத்​தில் பாஜக, ஆர்​எஸ்​எஸ் அமைப்​பு​கள் கால்​ப​திக்க முயல்​கின்​றன. அரசி​யலமைப்பு சட்​டம், நாடாளு​மன்ற விதி​முறை​கள், மதச்​சார்​பின்​மை, ஜனநாயகம் ஆகிய​வற்றை அச்​சுறுத்​தும் வகை​யில் செயல்​படு​கின்​றன.

மக்​களு​டன் இருப்​பதும், மக்​களுக்​காக போராடு​வதும், பாஜக, ஆர்​எஸ்​எஸ் அமைப்​பு​களை தோற்​கடிப்​பதுமே எங்​களின் வியூ​கம். இண்​டியா கூட்​டணி பலமாக உள்​ளது. தேர்​தல் ஆணை​யம் வாக்​கு​களை உறுதி செய்​வதற்​குப்​ பதிலாக ​வாக்​​காளர்​களை நீக்​கும்​ ஆணை​ய​மாக செயல்​பட்​டு வரு​கிறது. இதை எதிர்​த்​து இண்​டி​யா கூட்​டணி போ​ராடி வரு​கிறது. இவ்​​வாறு அவர்​ கூறி​னார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *