பெங்களூரு: கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை வரும் ஏப். 17-ஆம் தேதி கூடி ஆலோசனை நடத்துகிறது.
கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் முழு அறிக்கையை முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை விரைவில் பொதுவெளியில் வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில், அதற்கு முன்னதாக நடைபெறும் இந்த சிறப்பு ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
நாட்டிலேயே முதல் மாநிலமாக, காங்கிரஸ் ஆளுங்கட்சியாக உள்ள தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதிலுள்ள விவரங்கள் வெளியிடப்பட்டுவிட்டன. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது மாநிலமாக கர்நாடகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.