சாம்சங் தொழிலாளர்கள் கைது: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

Dinamani2f2024 10 092fz0dhsfgu2fsamsung.png
Spread the love

சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரமாக இன்று முறையிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத் தொழிலாளா்கள்,  ஊதிய உயர்வு, தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அமைச்சா்கள் டி.ஆா்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோா் அடங்கிய குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைத்தாா்.

இந்தக் குழுவினா் சாம்சங் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கம் அமைப்பதைத் தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதையும் படிக்க | போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் கைது!

ஆனால், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சாம்சங் இந்தியா சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளின் வீடுகளுக்குச் சென்ற காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் தொழிலாளர்களின் போராட்டப் பந்தலையும் இரவோடு இரவாக அகற்றியுள்ளனர்.

இந்நிலையில் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று வருகை தரவிருந்த நிலையில், காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த சிஐடியு மாநிலத் தலைவர் செளந்தரராஜனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க | பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விற்பனை!

சாம்சங் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி இந்த வழக்கு இன்று பிற்பகல் நீதிபதிகள் பாலாஜி, அருள்முருகன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *