சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

Dinamani2f2024 09 272fp2o9xp882f202311283088902.jpg
Spread the love

காஞ்சிபுரம் சுங்குவாா்சத்திரத்தில் இயங்கிவரும் சாம்சங் ஆலையில், தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 1500-க்கும் அதிகமான தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சென்னையில் கடந்த சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் மற்றும் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ஆகியோர் தொழிலாளா்களுடன் தலைமைச் செயலகத்தில் இன்றிரவு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, சாம்சங் நிறுவனம் தரப்பில் தொழிலாளா்களின் 14 கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா்களுடன் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சாம்சங் தொழிலாளா்கள் பணிக்கு திரும்ப அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களுடன், தமிழக அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் ஒரு தரப்பினர் சாம்சங் நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதையடுத்து, இந்த மாதம் முதல் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 சம்பள உயர்வு வழங்கி உள்ளதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சங்க விவகாரத்தில், தொழிலாளர்களின் பிரதிநிதி குழு ஒன்று அமைக்கப்பட்டு, பிரச்சினைகள் குறித்து பேசப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சாம்சங் நிறுவனத்துடன் அமைச்சா் பேச்சு: நல்ல முடிவு எட்டப்படும் என நம்பிக்கை

இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று சிஐடியு தெரிவித்துள்ளது. தொழிலாளா்களின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *