சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

Spread the love

சாம்பியன்ஸ் லீக்கில் தனது முதல் போட்டியில் லிவர்பூல் அணி, ஜூலியன் அல்வராஸ் இல்லாத அத்லெடிகோ மாட்ரிட் உடன் மோதியது.

இந்தப் போட்டியில் முகமது சாலா 4-ஆவது நிமிஷத்தில் ஓர் அசிஸ்ட்டும் 6-ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் அடித்தும் அசத்தினார்.

இதன்மூலம், சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் இங்கிலாந்து நாட்டின் கிளப் அணிகளில் 6 நிமிஷங்களில் ஓர் அசிஸ்ட், ஒரு கோல் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனைக்கு முகமது சாலா சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

அத்லெடிகோ மாட்ரிட் சார்பில் 45+3, 81-ஆவது நிமிஷங்களில் மார்கோஸ் லொரேன்டா கோல் அடித்து 2-2 என சமன்படுத்த, 90+2-ஆவது நிமிஷத்தில் வான் டிஜிக் கோல் அடித்து வெற்றிப் பெறச் செய்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *