சாய் சுதர்ஷன் 82: ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு!

Dinamani2f2025 04 092feh0ac61g2fap25099540573914.jpg
Spread the love

ஐபிஎல் போட்டியின் 23-ஆவது போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 3ஆவது ஓவரில் முதல் விக்கெட் கிடைத்தது.

அடுத்ததாக ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன், ஜாஸ் பட்லர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.

பட்லர் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த ஷாருக்கான் அதிரடியாக விளையாடி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சாய் சுதர்ஷன் 82 ரன்களுக்கு ஆட்டமிழக்க ரஷித் கான் 4 பந்துகளில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 217/6 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் சார்பில் தீக்‌ஷனா, தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளும் சந்தீப் சர்மா, ஆர்ச்சர் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

இந்தப் போட்டியில் குஜராத் அணி வென்றால் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் டைட்டன்ஸ் ஸ்கோர் கார்டு

ஷுப்மன் கில் – 2

சாய் சுதர்ஷன் – 82

ஜாஸ் பட்லர் – 36

ஷாருக்கான் – 36

ரூதர்ஃபோர்டு – 7

தெவாட்டியா – 24*

ரஷித் கான் – 12

அர்ஷத் கான் – 0*

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *