சாலையில் தரையிறங்கிய சிறிய ரக போர் விமானம்: புதுக்கோட்டையில் பரபரப்பு | Plane Makes Emergency Landing on Pudukkottai-Trichy Highway

Spread the love

புதுக்கோட்டை: திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலை அருகே வானத்தில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடி, சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கியமான தேசிய நெடுஞ்சாலை ஆக உள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே இன்று சாலையில் பிற்பகல் அவசரமாக சிறிய ரக போர் விமானம் தரை இறக்கப்பட்டது.

சாலையில் தரையிறக்கப்பட்ட நேரத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. போர் விமானத்தில் 2 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. போர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தகவல் அறிந்ததும் கீரனூர் போலீஸார் மற்றும் வருவாய் துறையின் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். போர் விமானம் தரையிறக்கப்பட்ட தகவல் அறிந்து ஏராளமானோர் திரண்டு பார்வையிட்டனர். விமானம் அருகே யாரையும் நெருங்க விடாமல் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

போர் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்வதற்காக தஞ்சாவூர் விமான நிலையத்திலிருந்து பொறியாளர்கள் விரைந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *