மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப் பாதையில் கல்லாறு அருகே 1-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது, கார் திடீரென பிரேக் பிடிக்காமல் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி நின்றது.
இதில், படுகாயமடைந்த திவ்யபிரியா, பரமேஸ்வரி, வளர்மதி ஆகியோரை அப்பகுதி மக்கள் உதவியுடன் கார்த்திக் ராஜா, ஓட்டுநர் பார்த்திபன் ஆகியோர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு திவ்யபிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பரமேஸ்வரி, வளர்மதி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இச்சம்பவம் குறித்து மேட்டுப் பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.