கன்னோஜ்: லக்னௌ-ஆக்ரா விரைவுச் சாலையில் புதன்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் 4 மருத்துவர்கள் மற்றும் ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் என 5 பேர் பலியாகினர்.
பலியானவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் அமித் குமார் ஆனந்த் கூறுகையில்,
மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்று லக்னௌவில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் பங்கேற்றுவிட்டு சைஃபாய்க்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது லக்னௌ-ஆக்ரா விரைவுச் சாலையில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாக வந்தகொண்டிருந்து மருந்துவர்கள் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது விபத்துக்குள்ளானது.
இதில், 4 மருத்துவர்கள் மற்றும் ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் என 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்து வந்த போலீசார் பலியானவர்களின் உடல்களை மீட்டு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.