இதைத்தொடர்ந்து, மீட்கப்பட்ட நிலத்தை சிறைகள் மற்றும் சீர்திருத்தத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், இது அரசு நிலம் என்பதால், இப்பகுதியில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்புப் பலகையும் அதிகாரிகள் வைத்தனர்.
பின்னர், மீட்கப்பட்ட இடத்தில் திறந்தவெளி சிறைச்சாலை அமைப்பது தொடர்பாக சிறைத் துறை அலுவலர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் முழுவதும் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதையடுத்து கட்டடத்தில் இருந்த பொருள்களை சாஸ்த்ரா நிர்வாகம் எடுத்து காலி செய்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, இந்த இடத்திற்குப் பதிலாக மாற்று இடம் தருகிறோம் எனவும் சாஸ்த்ரா தரப்பில் சொல்லி வந்ததாகவும் அது எடுபடவில்லை என்கிறார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி இருக்கும் என நிலத்தை மீட்பதற்குச் செயல்பட்டு வந்த குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சாஸ்த்ரா நிர்வாகம் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்வதற்கும் வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.