சிஏ தேர்வில் பெரிய மாற்றம்: ஜனவரி முயற்சி நீக்கம்|ICAI Proposes Major Changes in CA Exams and Articleship

Spread the love

இந்தியாவிலேயே மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் “பட்டயக் கணக்காளர்’ (CA) தேர்வு. இதில் ஒரு மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களின் தேர்வுத் தயாரிப்பினை சீரமைக்கவும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

இதன்படி, வரும் மே முதல் சிஏ இறுதித் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள ஜனவரி மாதத் தேர்வு முறை நீக்கப்படுகிறது, இனி மே மற்றும் நவம்பர் மாதங்களில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த மாற்றத்திற்கான முதன்மைக் காரணம், மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகளுக்கும், அடுத்தத் தேர்வுகளுக்கும் இடையே போதுமான கால அவகாசத்தை வழங்குவதுதான்.

தற்போதைய மூன்று முறை தேர்வு முறையில், ஒரு தேர்வின் முடிவுகள் வெளியான பிறகு அடுத்தத் தேர்வுக்குத் தயாராவதற்கு மாணவர்களுக்கு மிகக் குறைந்த காலமே கிடைக்கிறது.

இதனால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவும், மாணவர்கள் பாடங்களை முழுமையாக உள்வாங்கித் தேர்வெழுதவும் இந்த இரண்டு முறை தேர்வுத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *