சிக்கந்தர் ராஸா ஜிம்பாப்வே அணியை வழிநடத்துவது எங்களது அதிர்ஷ்டம்! பயிற்சியாளர் பெருமிதம்!

Dinamani2f2024 072f9ec77bff 3eaf 411e 927b Faee8094dfb02fzim.jpg
Spread the love

இந்தியாவுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் ஜிம்பாப்வே அணி, பேட்டா் சிகந்தா் ராஸா தலைமையில் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

இம்மாதம் ஜிம்பாப்வே செல்லும் நடப்பு உலக சாம்பியனான இந்திய அணி, 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் அந்நாட்டு அணியுடன் விளையாடுகிறது. இந்தத் தொடா், வரும் 6-ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்கான ஜிம்பாப்வே அணி, பல இளம் வீரா்களுடன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனுபவமிக்க பேட்டரான சிகந்தா் ராஸா அதற்கு கேப்டனாக்கப்பட்டுள்ளாா். எனினும் மூத்த வீரா்களான கிரெய்க் எா்வின், ஷான் வில்லியம்ஸ், ரையான் பா்ல் உள்ளிட்டோா் இந்த அணியில் சோ்க்கப்படவில்லை.

5 டி20 போட்டிகள் விவரம்

முதல் போட்டி – ஜூலை 6

2-வது போட்டி – ஜூலை 7

3-வது போட்டி – ஜூலை 10

4-வது போட்டி – ஜூலை 13

5-வது போட்டி – ஜூலை 14

(அனைத்து போட்டிகளும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகின்றன)

இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளஎர் கூறியதாவது:

சிக்கந்தர் ராஸா மாதிரியான ஒருவர் அணியை வழிநடத்துவதில் நாங்கள் அதிர்ஷ்டமாக கருதுகிறோம். அவருக்கு டி20களில் அதிகமான அனுபவம் இருக்கிறது. அவர்தான் அணியை முன்னிறு நடத்தவேண்டுமென விரும்புகிறோம். ஓய்வறையில் வீரர்களுடன் பேசுவது அவர்களை எப்படி கையாள்வது என எல்லாம் சரியாக செய்கிறார். அவரது பேட்டும் பந்தும் மட்டுமே பேச வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம் என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *