நாமக்கல்,மே.3-
நாமக்கல், தேவாராயபுரத்தை சேர்ந்தவர் நதியா(வயது40).இவரது மகன் பகவதி(20).கல்லூரி மாணவரான இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் உள்ள ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டார்.
சிக்கன் ரைஸ்
பின்னர் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி வந்து தனது தாத்தா சண்மும்(77), தாய் நதியா ஆகியோருக்கு கொடுத்தார். இதில் அவர்கள் 2 பேருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தாத்தா&தாய் சாவு
அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் சண்முகம் பரிதாபமாக இறந்தார். நதியாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற தாய் நதியாவும் இன்று பரிதாபமாக இறந்து போனார்.
முதலில் பூச்சி மருந்து கலப்பு
இந்த விவகாரம் தொடர்பாக பகவதி பார்சல் வாங்கிய ஓட்டல் சீல் வைக்கப்பட்டது. அன்றையதினம் ஓட்டல் உணவ¬ சாப்பிட்ட சண்மும், நதியா ஆகியோருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் சாப்பிட்டு மீதி இருந்த சிக்கன் ரைசை பரிசோதனைக்கு அனுப்பினர். இதில் சிக்கன் ரைசில் பூச்சி மருந்து கலந்து இருப்பது தெரியவந்தது.
கண்டிப்பு
இதைத்தொடர்ந்து சிக்கன் ரைஸ் வாங்கி கொடுத்த பகவதியிடம் விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அவருக்கு கெட்ட சவகாசம் இருந்து உள்ளது. கள்ளத்தொடர்பு காரணமாக பகவதியை அவரது தாய் நதியா, தாத்தா சண்முகம் ஆகியோர் கண்டித்து உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பகவதி அவர்களுக்கு சிக்கன் ரைஸ்வாங்கி அதில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து கொலை செய்து இருப்பதுதெரிந்தது. பகவதியை போலீசார் கைது செய்து உள்ளனர்.