சிட்டிங் எம்எல்ஏக்கள் 70 பேருக்கு சீட் இல்லை:அறிவாலயம் அதிரடி முடிவு – Kumudam

Spread the love

2026 சட்டமன்ற தேர்தலில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதிமுக, காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு விருப்பமனுக்களை பெற்றுள்ளன. ஆளும் திமுக சார்பில் விருப்பமனு இன்னும் பெறப்படவில்லை. 

2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 90 சதவிகிதம் பேருக்கு 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் போட்டியிட திமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக 125 இடங்களை கைப்பற்றியது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ள எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் தொடர்பாக தனியார் நிறுவனம் மூலம் திமுக தலைமை  சர்வே எடுத்துள்ளது. 

இதில் 70 எம்எல்ஏக்களின் செயல்பாடு மோசம் என தனியார் நிறுவனம் திமுக தலைமையிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளது.   இந்த ரிப்போர்ட்டில் இடம் பெற்று உள்ளவர்களுக்கு 2021 சட்டமன்ற தேர்தலில் சீட் கொடுக்க வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

புதியவர்களுக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு வழங்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அதே போன்று, திமுகவில் சீனியர்களாக உள்ள  துரைமுருகன்,கே.கே.எஸ்.எஸ்.ஆர், பொன்முடி, ரகுபதி, காந்தி என பலருக்கும்  மீண்டும் போட்டியிட  வாய்ப்பு வழங்கப்படாது எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *