இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், “பான்டியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது மற்றும் வேதனையளிக்கிறது.
காவல்துறையினரும், அவசரகாலப் பணியாளர்களும் மக்களைக் காப்பாற்ற களத்தில் பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதேவேளையில் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் இந்தத் தாக்குதல் குறித்து, “ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பான்டி கடற்கரையில் ஹனுக்காவின் மெழுகுவர்த்தியை ஏற்றச் சென்ற யூதர்கள், நமது சகோதர சகோதரிகள் இழிவான தீவிரவாதிகளால் மிகவும் கொடூரமான தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றனர்.
இந்தத் தருணத்தில் இஸ்ரேலின் இதயம் ஒரு கணம் நின்றுவிட்டது. காயமடைந்தவர்கள் குணமடையவும், உயிரிழந்தவர்களுக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். ஜெருசலேமிலிருந்து எங்களின் ஆதரவை நாங்கள் அனுப்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.