நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவான மிஸ் யூ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து வெளியான இந்தியன் 2 திரைப்படம் சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனங்களைப் பெற்றன.
தற்போது, காதல் படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கு மிஸ் யூ எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்டு புரடக்ஷன்ஸ் தயாரிக்க, ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற படங்களை இயக்கிய என். ராஜசேகர் இதை இயக்கியுள்ளார்.
இதையும் படிக்க: திருமண நிகழ்வில் சிம்பு, சிவகார்த்திகேயனுடன் தனுஷ்!
தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் தமிழகமெங்கும் ’மிஸ் யூ’ திரைப்படம், நவம்பர் 29 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்தில் 8 பாடல்களை இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், மிஸ் யூ படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். காதலும் நகைச்சுவையுமாக உருவாகியுள்ளது.