மைசூர் புலி என அழைக்கப்படும் மாவீரர் திப்பு சுல்தானின் வழித் தோன்றலான நூர் இனாயத் கானுக்கு பிரெஞ்சு அரசு தபால் தலை வெளியிட்டு சிறப்புபடுத்தியிருக்கிறது.
சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜெர்மனிக்கும், அதை ஆதரித்த நாடுகளுக்கு எதிராகவும், நேச நாடுகளான சோவியத் யூனியன், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் 1939 முதல் 1945 வரை போர் நடத்தியது. இந்தப் போர் “இரண்டாம் உலகப் போர்’ என அழைக்கப்படுகிறது.
இந்த உலகப் போரின் போது 18-ம் நூற்றாண்டின் மைசூர் பகுதியை ஆட்சி செய்த திப்பு சுல்தானின் வழித்தோன்றலான நூர் இனாயத் கான், பிரான்ஸ் அரசுக்காக மறைமுக ஏஜென்டாக பணியாற்றினார்.
அதை நினைவுப்படுத்தி கௌரவிக்கும் விதமாக பிரெஞ்சு தபால் சேவையான லா போஸ்ட், நூர் இனாயத் கானின் நினைவு தபால்தலையை வெளியிட்டிருக்கிறது. பிரான்சால் நினைவு தபால்தலையை வழங்கி கௌரவிக்கப்பட்ட ஒரே இந்திய வம்சாவளி பெண் நூர் இனாயத் கான் ஆனார்.