சினிமாவில் பிரபலமாக இருந்தவர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது சரியல்ல: எச்.ராஜா  | H.Raja talks on TN Politics

1333706.jpg
Spread the love

கும்பகோணம்: சினிமாவில் பிரபலமாக இருந்தவர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது சரியல்ல என்று எச்.ராஜா தெரிவித்தார்.

கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயிலில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தனது குடும்பத்துடன் தரிசனம் மேற்கொண்டப்பின், செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2014-2019-ல் பாஜகவிற்கு என அறுதிப்பெரும்பான்மை இருந்தும் கூட கூட்டணி கட்சிகளை ஆட்சியில் பங்கு பெறவைத்திருந்தோம். ஆட்சியில் பங்கு என்பது யார் பெயரைக் கூறி, யாருடன் கூட்டணி என வாக்கு சேகரித்து வெற்றி பெறுகிறமோ, அவர்களுக்கு ஆட்சியில் பங்களிக்க வைக்க வேண்டும்.

திமுக எப்போதுமே, ஒருவருடைய பெயரையும், அவர்களின் புகைப்படத்தை போஸ்ட்டரில் அச்சிட்டு, வாக்கு சேகரிப்பார்கள். ஆனால் திமுக, அவர்களை உள்ளே உட்கார அனுமதிக்காமல் வெளியே போய்விடு என்பார்கள். பாஜக அவர்களைப் போல் இல்லை. கூட்டணியோடு ஆட்சியில் இருப்பது தான் சரி.

நடிப்பு என்றால் நடிகர் சிவாஜி தான். அவருக்கு சமமாக நடிப்பதற்கு இன்று வரை யாரும் இல்லை. ஆனால் அவரால் அரசியலில் பரிணமிக்க முடியவில்லை. விஜயகாந்த் உள்பட எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளார்கள். சினிமா பிரபலமாக இருந்தோம் என்பதற்காக, அவர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைப்பது சரியல்ல என்பதைத் தமிழக மக்கள் பலமுறை அவர்கள் அளித்த தீர்ப்பின் மூலம் சொல்லி உள்ளார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *