“சினிமாவையும், நடிப்பையும் நான் காதலிக்கிறேன்” – கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் | “I love cinema and acting” – Rajinikanth at Goa International Film Festival

Spread the love

கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நவம்பர் 20-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், உலகம் முழுவதும் 81 நாடுகளிலிருந்து 240-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

இந்த நிலையில் சர்வதேச திரைப்பட விழா நாளான இன்று (நவம்பர் 28), சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால், திரைத்துறையைச் சேர்ந்தவர்களால் அழைக்கப்படும்

கோவா 56-வது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்த்

கோவா 56-வது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்ததை கவுரவிக்கும் விதமாக ரஜினிகாந்த்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

விழா மேடையில் விருதை பெற்றுக்கொண்டு பேசிய ரஜினிகாந்த், “சினிமாவில் 50 ஆண்டுகள், திரும்பிப் பார்க்கும்போது 10, 15 வருடங்கள் போல இருக்கிறது. ஏனெனில் சினிமாவையும், நடிப்பையும் நான் காதலிக்கிறேன்.

இன்னும் 100 ஜென்மங்கள் எடுத்தாலும் மீண்டும் நடிகராக ரஜினிகாந்த்தாகவே பிறக்க விரும்புகிறேன்.

இந்தப் பெருமையானது சினிமாத்துறை மற்றும் அதில் இருக்கும் எல்லோருக்குமானது. குறிப்பாக என்னை வாழவைக்கும் தெய்வங்களான மக்களுக்கானது” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *