சின்ன திரை நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் முதல்முறையாக நடுவராகப் பங்கேற்கவுள்ளார். அவருடன் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் மற்றும் ஆல்யா மானசா ஆகியோரும் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியை நடிகை மணிமேகலை தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கு முன்பு இவர், டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மற்றொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்னைக்குப் பிறகு, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளராகியுள்ள மணிமேகலைக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.