“சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றைச் சேர்க்க வேண்டும்” – திருச்சி சிவா | “include tamil freedom fighters history in the CBSE curriculum” – Trichy Siva

Spread the love

தமிழ்நாட்டில் நேதாஜி சாலை, திலகர் சாலை, கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை உள்ளன. வட மாநிலங்களில் எங்காவது வ.உ.சிதம்பரனார், பூலித்தேவன், குயிலி, செண்பகராமன், தீரன் சின்னமலை உள்ளிட்டவர்களின் பெயர் எதற்கேனும் சுட்டப்பட்டுள்ளதா? 

நாங்கள் தேசிய விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றி பாடப்புத்தகங்களில் படிக்கிறோம். நீங்கள் எங்களின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றி பாடப்புத்தகங்களில் சேர்த்திருக்கிறீர்களா?

திருச்சி சிவா

திருச்சி சிவா

‘வெள்ளையனே வெளியேறு முழக்கத்தை’ முதன்முதலின் முழங்கியவர் பூலித்தேவன், ‘ஜெய் ஹிந்த்’ சொல்லை முதன்முதலில் சொன்னவர் செண்பகராமன், வேலுநாச்சியார் உடன் நின்று வெள்ளையனை எதிர்த்தவர் குயிலி.

முதன்முதலில் வெள்ளையர்களுக்கு எதிராக சொந்தமாக கப்பல் ஓட்டி சிறை வாசம் அனுபவித்தவர் வ.உ.சி. இப்படி பல விடுதலைப் போராட்ட வீரர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களின் வரலாறுகளை CBSE பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அவர்களின் பெயர்கள் சாலைகளுக்கும், போர் கப்பல்களுக்கும் சூட்ட வேண்டும்.

போர் கப்பலை எடுத்து வந்து இந்திய விடுதலைக்காகப் போராட பல போராட்டங்களைச் செய்த செண்பகராமன் பெயரை போர் கப்பலுக்கு வைக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை தேசிய அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் ஒன்றிய அரசு.

தமிழ் விடுதலைப் போராட்ட வீரர்களை ஒன்றிய அரசு நிராகரிக்கக் கூடாது, மறைக்கக் கூடாது” என்று பேசியிருக்கிறார் திருச்சி சிவா.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *