பேசாமல் நடிக்கும் காட்சியை எப்படி உயிர்ப்பிக்க வேண்டும் என்பது பெரிய சவாலாக இருந்தது. அப்படிப்பட்ட தருணங்களில்தான் சிரஞ்சீவி என் நடிப்பை மெருகேற்றுவதற்கு உதவினார்.
அந்தக் காட்சியில் நான் எவ்வளவு முக்கியமானவள் என்பதை அவர் உணர்த்தினார். அப்போது அவர் திடீரென்று என்னைப் பார்த்து, ‘என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். நான், ‘நடிக்கிறேன்’ என்றேன்.
உடனே அவர், ‘நீங்கள்தான் இந்தப் படத்தின் ஹீரோயின்; ஜூனியர் ஆர்டிஸ்ட் இல்லை’ என்றார். கமர்ஷியல் சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட்களை வெறும் ரியாக்ஷன் கொடுக்க மட்டுமே பழக்கப்படுத்துவார்கள்.
ஆனால் அந்தக் கதாபாத்திரத்திலும் அவர் என்னை கதாநாயகியைப் போல நடிக்கச் சொன்னார். நான் நடிகையாக மாறிய பிறகு சிரஞ்சீவியுடன் என்னுடைய முதல் நேரடி தெலுங்கு படத்தில் நடித்தேன்.
அப்போது சிரஞ்சீவி என்னை உற்றுப் பார்ப்பதை உணர ஆரம்பித்தேன். முன்பு உதவி ஒளிப்பதிவாளராக ரிஃப்ளெக்டரைப் பிடித்துக்கொண்டிருந்த என்னைத்தான் அவர் அறிந்திருந்தார். அப்போது நான் அவர் முன்பு கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்தேன்.
ஆரம்பத்தில் அவருக்கே அதை ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது (நகைச்சுவையாக). ரிஹர்சிலின் போது அவர் என்னிடம், ‘திடீரென்று என்னைப் பார்க்கக் கூடாது. சாதாரணமாகப் பார்த்து டயலாக் பேச வேண்டும்’ என்றார்.
அதற்கு நான், “கமல்ஹாசனின் அண்ணன் மகள் நான். நடிகர்கள் சூழ்ந்துதான் வளர்ந்திருக்கிறே்ன். மறந்துவிடாதீர்கள்’ என்று நினைவூட்டினேன். இயல்பாகவே அந்தக் காட்சியை நடித்தேன். இறுதியில் அவரின் பாராட்டையும் பெற்றேன்” என்றார்.