சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்- அமைச்சர் சேகர்பாபு

Dinamani2fimport2f20222f52f162foriginal2fsekarbabu1.jpg
Spread the love

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌ எனவும்,பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது குறித்து அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிடுவார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் அருள்மிகு பெரியாண்டவருக்கு 12 கிலோ எடையில் உபயதாரர் நிதியில் இருந்து உருவாக்கப்பட்ட வெள்ளிக் கவசத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு 12 கிலோ எடையிலான வெள்ளி கவசம் தூத்துக்குடி மாவட்டம் தேரிக்குடியிருப்பு பகுதியில் உள்ள அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோவிலுக்கு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உபயதாரர்களின் பங்களிப்பு பெருமளவு திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் வழங்கப்படும் நிதிகள் அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப திருக்கோவில்களுக்கு திருப்பணிக்கும் பயன்படுவதால் அதிக அளவு உபயதாரர்கள் திருக்கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.

முதல்வர் பொறுப்பேற்ற பிறகுதான் அதிகளவில் கோவில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது. இதுவரை 2350 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இன்னும் சில நாட்களில் ரூ.1 கோடி மதிப்பிலான வைர கிரீடம் ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு உபயதாரர்களால் வழங்கப்பட உள்ளது. இதுவரை 10,000 மேற்பட்ட கோயில்கள் திருப்பணிக்காக மாநில வல்லுநர் குழுவால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

33 ஆண்டுகளுக்கு பின் நெல்லையப்பர் கோவிலுக்கு 100 கிலோ வெள்ளியை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த மூன்றரை ஆண்டு காலத்தில் இந்து சமய அறநிலைத்துறையில் நடைபெற்ற சாதனைப் போல் வேறு எந்த ஆட்சி காலத்திலும் நடைபெறவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *