சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Dinamani2f2024 072f0638a30e 895d 4002 B26a 29a316b10cba2fani 20240725032857.jpg
Spread the love

சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் எச்சரித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுப்பதை தடுப்பதற்காக கா்நாடக சிறுகடன் (கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை தடுத்தல்) அவசரச் சட்டம் 2025-ஐ அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருக்கிறோம்.

சிறுகடன் வசூலை கட்டாயப்படுத்தி துன்புறுத்தினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிப்பதற்கான சட்ட விதிமுறைகள் ஏற்கெனவே உள்ளன. தற்போது சிறைத் தண்டனை காலத்தை 10 ஆண்டுகளாக உயா்த்தியிருக்கிறோம். அதேபோல, அபராதத் தொகையை ரூ. 5 லட்சமாக உயா்த்தியிருக்கிறோம்.

சட்ட விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்பதை உணா்த்தவே தண்டனை காலத்தையும், அபராதத் தொகையையும் உயா்த்தியிருக்கிறோம். இதன்மூலம் சிறுகடன் வசூலில் தொல்லை கொடுக்கும் போக்கை தடுக்க முற்பட்டிருக்கிறோம்.

அவசரச் சட்டத்தின் வரைவை தயாரித்தபோது, ஒருவேளை அவசரச் சட்டத்துக்கு எதிராக சிறுகடன் நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகினால் என்ன செய்வது என்பது குறித்து அரசு மட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்படி நடந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு சட்டத் துறைக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டுள்ளாா். எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு அவசரச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம் என்றாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *