சிறுநீரக திருட்டு வழக்கில் 3 பேர் கைது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் | Govt informs High Court 3 arrested in kidney theft case

1381445
Spread the love

மதுரை: பரமக்​குடியை சேர்ந்த சத்​தீஸ்​வரன், நாமக்​கல் மாவட்​டத்​தில் நடை​பெற்ற சிறுநீரக திருட்டு சம்​பவம் தொடர்​பான வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றக் கோரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு நீதிப​தி​கள் அனிதா சுமந்த், குமரப்​பன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அரசு வழக்​கறிஞர் வாதிடும்​போது, “சிறுநீரக திருட்டு தொடர்​பாக 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்” என்​றார்.

மனு​தா​ரர் தரப்​பில், “சிறுநீரக திருட்டு வழக்​கின் முதல் தகவல் அறிக்கை நகல் வழங்க வேண்​டும்” என்று வலி​யுறுத்​தப்​பட்​டது. அதற்கு அரசுத் தரப்​பில், தேவைப்​பட்​டால் மனு​தா​ரருக்கு முதல் தகவல் அறிக்கை நகல் வழங்​கத் தயார் என்று தெரிவிக்​கப்​பட்​டது. அதற்கு நீதிப​தி​கள், “பொதுநல வழக்​கில் முதல் தகவல் அறிக்கை நகல் கோர வேண்​டிய அவசி​யம் இல்​லை” என்​றனர். பின்​னர், வி​சா​ரணையை நவ. 27-ம் தேதிக்கு தள்​ளி​வைத்து நீதிப​தி​கள்​ உத்​தர​விட்​டனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *