சிறுவனின் மண்டை ஓட்டை திறந்து அறுவை சிகிச்சை: விருதுநகர் அரசு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சாதனை | Virudhunagar Govt Medical College Hospital achieved performed skull opening surgery

1376301
Spread the love

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அரிய​வகை மூளைக்​கசிவு நோயால் பாதிக்​கப்​பட்ட 7 வயது சிறு​வனுக்கு மண்டை ஓட்டை திறந்து அரசு மருத்​து​வர்​கள் வெற்​றிகர​மாக அறுவை சிகிச்சை செய்​துள்​ளனர்.

இதுகுறித்து விருதுநகர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை டீன் ஜெயசிங் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வத்​தி​ரா​யிருப்பு செம்​பட்​டியைச் சேர்ந்த மணி​கண்​டன் என்​பவரின் மகன் பாலபிர​சாத்​(7). கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி விருதுநகர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் 3-வது முறை​யாக மூளைக் காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்டு உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் அனு​ம​திக்​கப்​பட்​டான்.

அச்​சிறு​வனுக்கு மீண்​டும் மீண்​டும் மூளைக் காய்ச்​சல் ஏற்​படு​வதற்​கான காரணத்தை கண்​டறிய, எம்​.ஆர்​.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்​த​தில் மூளைக்​கும், மூக்​கின் எலும்பு பகு​திக்​கும் இடையே துவாரம் இருப்​பதும், அதன் வழி​யாக அடிக்​கடி நோய் தொற்று ஏற்​படு​வதும் தெரிய வந்​தது.

அதைத் தொடர்ந்​து, மூளை நரம்​பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கணப​திவேல் கண்​ணன் தலை​மையி​லான மருத்​து​வக் குழு​வினர் சிறு​வனுக்கு அறுவை சிகிச்சை செய்து மண்​டையோட்​டின் அடிப்​பகு​தி​யில் உள்ள துவாரம் அடைக்​கப்​பட்​டது.

17577248242006

இது​போன்ற அறுவை சிகிச்​சைக்கு தனி​யார் மருத்​து​வ​மனை​களில் ரூ.15 முதல் ரூ.20 லட்​சம் வரை செல​வாகும். அரசு மருத்​து​வ​மனை​யில் முதல்​வர் காப்​பீட்​டுத் திட்​டத்​தில் முற்​றி​லும் இலவச​மாக அறுவை சிகிச்சை செய்​யப்​பட்​டுள்​ளது. தற்​போது சிறு​வன் முழு ஆரோக்​கி​யத்​தோடு உள்​ளான். இவ்​வாறு அவர் கூறி​னார்.

குழந்​தைகள் சிறப்பு சிகிச்சை மருத்​து​வர் அரவிந்த் பாபு, சிறு​வனுக்கு அறுவை சிகிச்சை செய்த மற்​றும் சிகிச்​சையளித்த மருத்​து​வர்​கள், செவிலியர்​கள் உடனிருந்​தனர்.

உறுப்பு தானத்​தில் 3-ம் இடம்: இதற்​கிடையே, உடல் உறுப்புதானத்​தில் சிறப்​பாக செயல்​பட்​டதற்​காக விருதுநகர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மாநில அளவில் 3-வது இடம் பெற்​றுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *